ஜோதிடத்தில் கொலைக்கான கிரக நிலை

ஜோதிடத்தில் கொலைக்கான கிரக நிலை
செவ்வாய் ஆத்திரம், ரோஷம், அவசரம் , ரத்தம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரன்.  சந்திரன் மன நிலைக்கு சொந்தக்காரன். ராகு கற்பனைகளுக்கு சொந்தக்காரன். எதையும் ஆராய்சி செய்து மறைந்திருக்கும் உண்மைகளை கண்டறிய காரணமானவன். ரகசிய செயலை மர்ம செயலை செய்ய தூண்டுபவன்.  புதன் நினைவாற்றலுக்கு சமயோசித புத்திசாலிதனத்துக்கு சொந்தமானவன்.  குருவே நேர்மைக்கு சொந்தக்காரன். சனி வைராக்கியத்துக்கு காரணமானவன்.

இந்தக் கிரகங்கள் எல்லாம் ஜாதத்தில் எங்ஙனம் பாதிக்கப்ட்டு இருக்கிறது என்று பார்த்தால் ஜாதகருக்கு கொலை செய்ய தூண்டும் எண்ணம் ஏற்படுமா ஏற்படாதா அது எப்பொழுது ஏற்படும் என்று உறுதியாக சொல்லலாம்.!

கொலை செய்யும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன என்ன?
ஒரு நபருக்கு நல்ல அன்பு காட்டக்கூடிய அரவணைக்கக்கூடிய ஒரு நண்பர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமல் போயிருந்தால் அவருக்கு நாம் யாருக்காக வாழ்கிறோம். நமக்கு இனி யார் இருக்கிறார்கள். என்று எண்ணி வாழ்க்கையை வெறுத்து போய்விடுகிறார்கள். அதனால் எந்த துரோகத்தையும் எதிர்த்து சமாளிக்கக்கூடிய தைரியம் இல்லாமல் போகிறார்கள்.

நேர்மைக்கு காரணமான குரு பாதிக்கப்ட்ட மனைவி நேர்மையாக நடக்க வில்லை ஒழுக்க குறைவாக நடக்கிறார் என்று ஒரு கணவர் கருத்தில் கொண்டு மனைவியை கொலை செய்கிறார் என்றால் அந்த கணவருக்கும் குரு பாதிக்கப்ட்டிருக்க வேண்டும். எப்படி என்றால் அந்த கணவரின் கடமை தனது தாய் தந்தையரை காப்பாற்றுவது. அடுத்து தனது பிள்ளைகளை தந்தை ஸ்தானத்தில் இருந்து காப்பாற்றுவது. இந்த கடமைகளிலிருந்து தவறுவதும் குரு பாதிக்கப்ட்டிருப்பதைதான் உணர்த்தும்.  (ஆக ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு பரிகாரம் ஆகுமா?)

கொலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன? என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீமைகள்தான் அதிகமாக இருக்கின்றன அந்த கொலை செய்யும் நேரத்தில் நாம் துரோகம் செய்தவர்களை பழிவாங்கி விட்டோம் என்று மனம் திருப்தி தற்காலிகமான சிறு  நிம்மதியைத்தான் தரும். அதன் பின்னர் வழக்கு நீதிமன்றம் என பின்னர் வரப்போகம் பிரச்சனைகளை கொஞ்சமாவது முன்பே யோசித்திருந்தால் கொலை செய்யும் எண்ணம் யாருக்கும் வராது. கொலை செய்வதால் கொலையுண்டவர்கள்  நிம்மதியாக செத்து விடுவா் அதற்கு பின்பு அவரது கர்மாவிற்கேற்ப அவருக்கு சூட்சும உடலும் கிடைத்துவிடும். அதன்பின்னு குறிப்பிட்ட காலம் வரை இவ்வுலகில் அவர்  வாழ்ந்து அதன் பின்னர் அவர் எங்கு செல்ல வேண்டுமே அங்கு இயற்கையாகவே சென்று விடுவார்கள். ஆக அவர்களுக்கு இந்த திட உடம்புதான் அழியுமே ஒழிய அவர்களது இன்ப துன்பங்கள் அவரவர் கர்மாவிற்கேற்ப கிடைத்துவிடும். ஆனால் கொலை செய்தவர்களின் நிலையை யோசித்தால்தான் மிகவும் பரிதாபமானதாக இருக்கும். ஒரு பக்கம் சட்டத்தின் பிடியில் தண்டனை அணுபவிக்க வேண்டும். அடுத்து  கொலை செய்த பாவமும் இவர்களது பாவக் கணக்கில் சேர்ந்து விடும். போதாக்குறைக்கு இவர் சிறைக்கு செல்வதால் இவர் சம்பந்தப்பட்ட உற்றார் உறவினர்களுக்கு ஏற்படும் மனக்கஷ்டங்களுக்கும் பணவிரயங்களுக்கும் இவர் காரணமாகிவிடுவார். இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளில் சிக்க நேரிடும். அதனால் கொலை செய்வது சரியான தீர்வு இல்லவே இல்லை! அதற்காக துரோகத்தை எப்படி பொறுத்துக்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். துரோகத்துக்கு சரியான வழி நீதிமன்றம் செல்வதுதான். அல்லது கடவுளை சரணாகதி அடைந்து பிரச்சனைகளை கடவுளிடம் விட்டுவிட்டு துரோகியாளரின் சகவாசத்தை விட்டு விலகிவிடுவது எவ்வளவோ மேல்!

கொலை பற்றிய தினகரன் செய்திகளின் ஒன்று கீழே
தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்

சென்னை: காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கண் முன்பு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அடுத்த அகரம்தென் அன்னை சத்யா நகர் அண்ணா தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் கணபதி (26). இவரது மனைவி கவுரி (23). இவர்களுக்கு திருமணம்  ஆகி 8 வருடம் ஆகிறது. இருவரும் தாம்பரம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர். தம்பதிக்கு இரண்டு மகன்கள்  உள்ளனர். கவுரிக்கு சில ஆண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, கணபதி  குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை கணபதி சபரிமலைக்கு சென்றார். மனைவி கவுரி, ‘‘நான் தனியாக வீட்டில் இருக்க முடியாது. சேலையூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்கிறேன்’’  என கூறிவிட்டு  அக்கா  வீட்டுக்கு சென்றுள்ளார்.  ஆனால் மாலை வரை கவுரி அங்கு செல்லவில்லை. உறவினர்கள் தேடிய போது  கவுரி வேறு ஒரு ஆணுடன்  தவறாக பழகியதாக தகவல் வந்தது. இதையடுத்து, கணபதி மலைக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார். வீட்டுக்கு வந்த கணபதி, ‘‘இனி  நீ எனக்கு வேண்டாம்.  உனக்காக என் குடும்பத்தையே இழந்து உன்னுடன் வாழ்கிறேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய்’’ என கூறி வீட்டை விட்டு துரத்தி விட்டார். பிறகு  மனைவியின்  உறவினர்கள் இருவரையும்  அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.  சேர்ந்து வாழ்வதாக கூறிய கவுரி கழிவறை செல்வதாக கூறிவிட்டு  மாயமானாள்.

கணவன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  எனவே, சேலையூர் போலீசில் மனைவி காணாமல் போனது தொடர்பாக கணபதி புகார்  செய்தார். இந்நிலையில், கவுரி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார்  விசாரணைக்கு வரும்படி   கணபதியை அழைத்தனர். மதியம் 3 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்தார் கணபதி. போலீசார் வெளியே காத்திருக்கும்படி கூறினர். வெளியே வந்த போது மனைவி  கவுரி உட்கார்ந்திருப்பதை கண்ட கணபதி, மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் இருவரையும் கண்டித்து உட்காரும்படி கூறினர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கணபதி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரை கொண்டு பெண் போலீசார் முன்னிலையிலேயே கவுரியை சரமாரியாக  குத்தினார்.

படுகாயம் அடைந்து நிலைகுலைந்த கவுரி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்து தப்ப முயன்ற கணபதியை போலீசார் பொதுமக்கள்  உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். கவுரியை, குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து  விட்டதாக கூறினர். இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முன்னிலையில் நடந்த கொலை  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கொலை பற்றி தேடினால் கீழ்கண்டவாறு ஏராளமான செய்திகள் காணப்படுகின்றன

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
ஆளவந்தார் கொலை வழக்கு
சங்கர்ராமன் கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு
இரட்டை கொலை வழக்கு: 27 பேருக்கு இரட்டை 'ஆயுள்
வித்தியா கொலை வழக்கு
கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கு
ராமஜெயம் கொலை வழக்கு
மகாத்மா காந்தி கொலை வழக்கு
ராஜீவ் கொலை வழக்கு ... - BBC.com
இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கு
நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு
ஷீனா கொலை வழக்கு
டெல்லி மாணவி கொலை வழக்கு

கள்ளக் காதல் கொலைகள்!
முதியோர் கொலைகள்
கவுரவ கொலைகள்
ஒரு மோதிரம் இரு கொலைகள்
தற்கொலை செய்த காதலி
கொலை வழக்கு
கொலை செய்வது எப்படி
கொலை வழக்கில்
கொலை வழக்குகள்
கொலை செய்வது போல் கனவு
கொலை செய்து
கொலை செய்யப்பட்ட


ஜோதிடர்களுக்கு கஷ்ட காலம் வரக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியே ஜோதிடர்களின் மகிழ்ச்சி!

ஜோதிட ரகசியம் - ஜெயிக்கப் போவது யார்? ஜோதிடமா? விஞ்ஞானமா?