உலகில் இந்திய ஜோதிடம் என்பது காலத்தால் சோதிக்கப்பட்ட மிகப் பழமையான ஜோதிட முறையாகும் . ஜோதிஷ என்னும் சமஸ்கிரித வார்த்தை ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள்படுகிறது . இந்து (அ) இந்து ஜோதிடத்தை மேலை நாட்டினர்கள் வேதாங்க ஜோதிடம் என்று அழைக்கிறார்கள் . வேத காலத்திலிருந்து ஜோதிட சாஸ்திரத்தின் சுவடுகள் தெரிகின்றன . நமது வேதங்களில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது .
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை விதி என்ன ?
ஒரு கரு உருவாகும் நேரத்தைப் பொறுத்து எதிர்காலம் அமைகிறது . ஆண் , பெண் உடல் உறவால் , கருத்தரித்தல் அனைத்து மனிதர்களுக்கும் , ஒரே நேரத்தில் நடைபெறுவது இல்லை . இதனால் மாறுபட்ட ஜாதகம் அமையலாம் .
கரு வளரும் காலத்தில் நிலவும் கோள்களின் கதிர் வீச்சு அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது கருவின் வளர்ச்சி தாய்க்கு தாய் அவரவர் உடல்நலத்தைப் பொறுத்து வேறுபடும் . இதன் காரணமாக ஒரே மாதிரி ஜாதகம் அமையாது போகலாம் .
குழந்தை பிறக்கும் தருணத்தில் நிலவும் கோள்களின் கதிர்வீச்சு அமைப்பும் , அந்த நேரத்தில் இருந்த பிரபஞ்ச சக்தியுமே அந்த குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது .
இந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று உள்ளது . அது பூர்வஜென்ம - பாவ புண்ணியங்களும் , முன்னோர்களது பாவ - புண்ணியங்களும் பிறக்கும் குழந்தைகளை வந்து சேர்கிறது. கர்மா ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதாகும் .இதை நமது வேதாங்க ஜோதிடம் உறுதியாக ஏற்றுக்கொள்கிறது .
அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை , தீவினைகளின் தன்மையை பார்த்து , உணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் , தீவினை செய்தோர் , தீமைகளையும் அடையும் படி பிரம்ம தேவனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாட்டின் படி அமைவதுதான் ஜாதகம் .
இந்த காரணத்தால் ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகம் , குணம் , நல்லது (அ) கெட்டது அனைத்தும் மனிதனுக்கு மனிதன் கண்டிப்பாக மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை . இதை அனுபவ பூர்வமாக நம் வாழ்க்கையில் அனுபவித்து வருவதே உறுதியான ஆதாரமாகும் .
சூரிய ஒளிக்கதிர்களும் , குருவின் ஒளிக்கதிர்களும் இணைந்து பூமியில் உள்ள ஜீவராசிகள் கருத்தரிக்கும் படிச் செய்கின்றன . மேலும் கர்ப்பத்தில் கருவளர்ச்சியில் மூன்றாம் மாதத்தில் இருந்து குறு கிரகமே காரணமாக கை , கால் , போன்றவை வழர வழி செய்கிறது , என்பதை வேத காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள் தெரிவித்த கருத்து , வேதாங்க ஜோதிடம் மூலம் தெரிய வருகிறது .
தாய் கருவுற்றிருக்கும் போது சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்ணவில்லை எனில் கருவளர்ச்சி பாதிக்கப்படுவதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
கருவுற்றிக்கும் காலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் முக்கியமாக வைரஸ் தொற்றுதல் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் கூட கருவை பாதித்து பிறவி நோய் (அ) ஊனம் ஏற்படுத்தலாம் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி செலுத்தப்படுகிற கதிரிகளிலுள்ள எக்ஸ் கதிர்கள் , காமா கதிர்கள் , ஆல்பா கதிர்கள் , நமது உடம்பில் உள்ள செல்களை பாதித்து மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதையும் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது .
அப்படியானால் ஒரு கரு உருவாகும் , வளரும் மற்றும் ஜனன கால கட்டங்களில் பாதகமான கோள்களின் நிலையால் பிரபஞ்சக் கதிர்கள் , மனித கரு (அ) உடலில் ஊடுருவும் போது மாறுதல்களை ஏற்படுத்தி அக்குழந்தையின் ஜாதகத்தை மாற்றிவிடும் என ஜோதிடக்கலை கூறினால் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது .