சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தி்ன் பலபகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை- விஜயவாடா, விஜயவாடா-சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கூடுர்-சென்னை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மன்னார்குடி-கோதி எக்ஸ்பிரஸ், பெரம்பூர், ரேணிகுண்டா வழியாகவும், திப்ரூகர்-பெங்களூரு ரயில் ரேணிகுண்டா வழியாகவும், திருவனந்தபுரம்-கவுகாத்தி ரயில் மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாகவும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினருக்கும் யானைகளுக்கும் கடும் போட்டி யாரை யார் விரட்டுவதென்று!
வால்பாறை:வனத்துறையினரின் வாகனத்தை விரட்டிய யானைகளால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா, 2ம் பிரிவு எஸ்டேட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ஒன்பது யானைகள், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. இதை அறிந்த வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவை சேர்ந்த, வனத்துறையினர் வாகனத்தில் அமர்ந்தபடி, யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், யானைகள் வனத்துறை வாகனத்தை விரட்டத் துவங்கின.மிரண்டு போன வனத்துறையினர், அதிக சத்தம் எழுப்பியும், தீ பந்தத்தை ஏந்தியும், யானைகளை, ஆறு மணி நேரத்துக்குப் பின் வனப்பகுதிக்குள் விரட்டினர்.யானைகள் வரவால், இப்பகுதி தொழிலாளர்கள் இரவெல்லாம் உறங்கமுடியாமல் தவித்தனர்.