ஜோதிடர்களுக்கு கஷ்ட காலம் வரக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!

ஜோதிடர்களுக்கு கஷ்ட காலம் வரக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!
ஜோதிடம் அழிவதை இனி யாராலும் காப்பாற்ற முடியாது!
முந்தை காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைய பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களுக்கு ஜாதகம் எழுத வேண்டுமானால் சோதிடரிடம் செல்வார்கள். ஆனால் இப்பொழுது வீட்டில் ஒரு பிள்ளைகள் இருக்கிறார்கள். அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தேவையான ஜாதகத்தை உருவாக்க இலவசமாக இணைய தளங்கள் இருக்கின்றன. அதனால் அவர்களும் ஜாதகம் எழுத ஜோதிடரை நாடுவதில்லை!

நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நேரம் பார்க்க சோதிடரை நாடுவார்கள் முற்காலத்தில். இப்பொழுது எல்லாமே காலண்டரிலும் இணைய தளங்களிலும் இலவசமாகவே கிடைத்து விடுகின்றன. ஆகையால்அதனாலும் சோதிடர்களுக்கு வருமாணம் போச்சு!

முற்காலத்தில் திருமண பொருத்தம் பார்க்க சோதிடர்களிடம் செல்வதுண்டு. இப்பொழுது அதுவும் இணையதளங்களில் இலவசமாக கிடைக்கிறது. இதனாலும் சோதிடர்களின் உதவி மக்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. இன்னும் தொழில் சார்ந்த சோதிட உதவிகளும் வாழ்க்கையில் விரக்தியில் இருப்பவர்களுக்கு தேவையான கஷ்ட நிவாரண சோதி்ட உதவிகளும் மட்டும்தான் சோதிடர் வசம் உள்ளன. இவைகளையும் இணையதளங்களில் வெளியிட்டு விட்டால் அப்புறம் சோதிடர்கள் சோதிடத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டியதுதான்.  இன்று இணையத்தில் இல்லாத ஜோதிட துணுக்குகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இணையத்தில் ஏராளமாய் ஜோதிட துணுக்குள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகவே இன்று எல்லோருமே எளிதில் கற்ககூடியதாக ஜோதிடதுறை இருக்கிறது.

இதை தவிர நிறைய போலி ஜோதிடர்கள் இந்த தொழிலில் இருந்த காரணத்தினால் ஜோதிடத்தில் மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. 
 
இப்படி பல காரணங்களினால் சோதிடர்களுக்கு எதிர்காலம் இல்லவே இல்லை எனும் நிலை வந்துவிட்டது.  எப்படி கைத்தறி நெசவு தொழில் இயந்திர புரட்சியால் காணமால் போனதோ, எப்படி மண்பாண்ட தொழில் (மண் பானை மண் சட்டி செய்யும் தொழில்) உலோக பயன்பாட்டால் மங்கி போனதோ! எப்படி பாவைகூத்து, நாடகத் தொழில் சினிமாவினால் அழிந்து போனதோ  அதுபோல சோதிட தொழிலும் மங்கி அது மறைய ஆரம்பித்துவிடும். 

விஞ்ஞானத்தின் வளர்ச்சியே ஜோதிடர்களின் மகிழ்ச்சி எப்படி?