விஞ்ஞானத்தின் வளர்ச்சியே ஜோதிடர்களின் மகிழ்ச்சி!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியே ஜோதிடர்களின் மகிழ்ச்சி!
விஞ்ஞானம் வேறு! ஜோதிடம் வேறு அல்ல. இரண்டும் ரயில் செல்வதற்கான தண்டவாள பாதை போன்றே இணையாக செல்லும் பாதைகள்தான். ஜோதிடம் சொல்வது அணைத்துமே விஞ்ஞான அறிவில்தான்போய் முடிகிறது. விஞ்ஞான அறிவு போதிய வளர்ச்சி பெறாத காரணத்தினாலேயே சோதிட அறிவை இன்னமும் மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சாஸ்திரங்களும், மரபு வழி சம்பிரதாயங்களும், சோதிடங்களும் ஏராளமான விஞ்ஞான ரகசியங்களை தன்னிடம் மறைத்து வைத்துள்ளன. அவைகள் சாதாரண மக்களிடம் போய் சேர்ந்தால் பேராபத்து நிகழும் என்ற காரணத்தினாலேயே அவைகள் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. காலத்தால் அந்த ரகசியங்கள் அழிந்து போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலே பலதரப்பட்ட புராண கதைகளாகவும், வியக்கதக்க கதைகளாகவும் உணர்சிகளை தூண்டும் கதைகளாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கதைகளாகவும், அதிசய சம்பவங்களை உள்ளடக்கிய கதைகளாகவும், வீரம் சொரிந்த கதைகளாகவும் சாஸ்திர சம்பிராதய கதைகளாகவும் என பல மனிதர்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரவும் வகையில் பலதரப்பட்ட கதைகளாக அவைகள் பரப்பப் பட்டிருக்கின்றன நமது முன்னோர்களால்.


இணையத்தில் உள்ள ஜோதிட துணுக்குகள் எல்லாமே நம்பத் தகுந்ததல்ல! 

இணையத்தில் பரவலாக அனைவரும் அறிந்த தெரிந்த விஷயங்கள் மட்டுமே பகிரப்டுகின்றன. ஒவ்வொரு ஜோதிடர்களும் கற்று தேர்ந்ததைவிட தங்கள் அனுபவத்தினாலும் தங்கள் சுய அறிவினாலும் சில மர்ம ரகசிய சூட்சும முறைகளாலும் இயற்கையாலும் பெற்ற  அந்த மேம்பட்ட ஜோதிட ரகசியங்களை தன் பிள்ளைகளிடம் கூட சொல்வது இல்லை! அந்தவிஷயங்களை மறைத்து வைத்துவிடுகிறார்கள். உண்மை நிலை அப்படி இருக்க அந்த மேம்பட்ட வித்தைகளை. ஜோதிட ரகசியங்களை எல்லாம் இணையத்தில் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்க முடியாது!. சகலரும் அறிந்த சாதாரண ஜோதிட அறிவு துணுக்குகளைத்தான் இந்த ஜோதிடர்களும் இணையதளங்களில் போடுகின்றனர்.
ஜோதிடர்களுக்கு கஷ்டகாலம் வரக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!